21 வருஷத்துக்கு முன்னாடி இப்படி பண்ணிட்டாரே டைரக்டர் ஷங்கர்; மனம் திறந்த சித்தார்த்
Author: Sudha1 July 2024, 11:09 am
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் சித்தார்த் பல நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸில் பேசிய நடிகர் சித்தார்த் ஷங்கர் அவர்களுடைய இயக்கத்தில் 21 வருடங்களுக்கு முன்பு வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்தேன் அது அவர் எனக்கு வழங்கிய மிகப்பெரும் வாய்ப்பு நான் நடிப்பதற்கான விதையை அவர் தான் போட்டது இன்று 21 வருடங்கள் கழித்து இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து நடிப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி..
நான் ஒவ்வொரு திரைப்படத்திலும் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு திரைப்படத்திலும் கமல்ஹாசன் அவர்களுடைய நடிப்பை பார்த்து வளர்ந்த எனக்கு அதனுடைய தாக்கம் நிச்சயமாக இருக்கும். பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு 21 வருடங்கள் கழித்து ஷங்கர் எனக்கு தந்த மிகப்பெரும் வாய்ப்பு இந்தியன் 2 என குறிப்பிட்டு இருந்தார்