லிவிங் டூ கெதர் உறவில் சித்தார்த் செய்யும் அட்டூழியம் – அதிதி ராவ் வாழ்க்கை அதோகதி தான்!
Author: Shree9 May 2023, 9:47 am
பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதையடுத்து நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார். இருவரும் ‘மஹாசமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் காதலாக உருவெடுத்தது. இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ந்து இப்படி நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் சித்தார்த்துக்கு திருமணம் செய்யாமலே உறவில் இருப்பதில் அதிக நாட்டம் உள்ளதால் அவரை நம்பி வரும் நடிகைகளின் வாழ்க்கை தான் கேள்வி குறியாக உள்ளது.