தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.
மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார். இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் முன்பு இவர் கொடுத்திருந்த போட்டோஸ் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.