அடடே சூப்பர்… பாலிவுட்டில் அறிமுகமான STR-யை வாழ்த்திய வலிமை பட நாயகி..! குஷியில் ரசிகர்கள்..!
Author: Vignesh14 October 2022, 3:00 pm
நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர். வெந்து தணிந்தது காடு திரைப்படம் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே, ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளது.

இதனிடையே, தற்போது பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகி இருக்கிறார் நடிகர் சிம்பு. ஹிந்தியில் வெளியாகவுள்ள திரைப்படம் Double XL, வலிமை திரைப்பட நடிகை ஹூமா குரேசி நடிப்பில் இத்திரைப்படம் வெளியாகி உள்ளது.

Double XL படத்தில் பாடல் ஒன்றை பாடியதன் மூலம் பாடகராக பாலிவுட்டிற்கு அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் சிம்பு. மேலும் Double XL படத்தில் சிம்புவின் நண்பரும் நடிகருமான பிக்காஸ் புகழ் நடிகர் மகத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here’s my first song in Hindi,
— Silambarasan TR (@SilambarasanTR_) October 14, 2022
My debut as a singer in Bollywood & this one is for my friend @MahatOfficial Onwards & upwards ! Proud of you ❤️
Good luck to the whole team of doubleXL Guys get ready to groove with the #TaaliTaali song! https://t.co/4WrANraUxU