இதுக்கு இல்லையா சார் ஒரு END?.. பெரிய இடத்து பெண்ணுடன் சிம்புவுக்கு விரைவில் திருமணம்..!
Author: Vignesh28 May 2024, 5:31 pm
தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் STR என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிகை நயன்தாராவை ரகசியமாக காதலித்து நெருக்கமாக இருந்தார். அவர்களின் லிப்லாக் புகைப்படங்கள் கூட இணையத்தில் லீக்கானது. அதையடுத்து, அவரை பிரிந்து நட்பாக பழகி வருகிறார். இதனிடையே நடிகை ஹன்சிகாவை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார்.

மேலும் படிக்க: மாப்பிள்ளை கட்டுடா தாலிய.. “டாடா” ஹீரோயினுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் கல்யாணம்..! (Video)
தற்போது, 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார். இவருக்கு சீக்கிரமாக திருமணம் செய்து பார்க்கவேண்டும் அவரது அப்பா டீ ராஜேந்தர் ஆசைப்பட்டு பெண் தேடி வந்த செய்திகள் கூட இணையத்தில் வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டது.

மேலும் படிக்க: இரவு பார்ட்டியில் PlayBoy நடிகருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!
இந்நிலையில், தமிழ்நாட்டில் சிம்புவுக்கு பெண் கிடைக்காததால் ஆந்திராவில் இருக்கும் ஒரு தொழிலதிபரின் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், சிம்புவுக்கு இலங்கையை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகளுடன் திருமணம் நடப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. தற்போது, தெலுங்கு நடிகர் ஒருவரின் மகளை சிம்பு திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியானது. மணப்பெண் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இப்படி சிம்புவின் திருமணம் குறித்து அடிக்கடிக்கு சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளால், அப்செட்டான ரசிகர்கள் இதற்கு இல்லையா ஒரு எண்டு தலைவா எப்ப நீ கல்யாணம் பண்ண போற என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.