சிவகார்த்திகேயனுடன் இணையும் சிம்பு? சஸ்பென்சை உடைத்த அமரன் படக்குழு!
Author: Udayachandran RadhaKrishnan18 October 2024, 6:41 pm
அமரன் படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் சிம்பு இணைந்துள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நிலையில், இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
மேஜர் முகுந்த்துக்கு நடந்த உண்மை சம்பவம் படமாக்கப்பட்டுள்ள நிலையில் முகுந்தனாக சிவகார்த்திகேயன், ரெபேக்கா வர்கீஷ் ஆக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க: சமந்தா கர்ப்பம்… விழா நடத்தி கொண்டாடும் நாகர்ஜுனா குடும்பம்!
இந்தநிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல் நடித்து வரும் THUG LIFE படத்தில் சிம்பு உள்ளதால், கமல் தயாரிப்பில் உருவாகியுள்ளதால் சிம்பு பங்கறேக்க உள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.