டேய் 2k கிட்ஸ்… 90ஸ் மூடுல வரேன்டா…. மாஸ் காட்டிய சிம்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2024, 7:14 pm

சிம்பு தற்போது thug life படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் என ஒரு பட்டாளமே நடித்து வருகின்றனர்.

கமல்ஹாசனுடன் சிம்பு முதன்முறையாக இணைந்துள்ளார். ஏஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைத்து.ள்ளார். அடுத்த ஆண்டு இந்தப்படம் திரைக்கு வருகிறது.

simbu thug life

தக் லைஃப் திரைப்படத்தை தொடர் நடிகர் சிம்பு என்ன படம் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஏற்கனவே அவரின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதால் அப்படத்தில் தான் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்க: ரூ.100 கோடியை தொட முடியாமல் தவிக்கிறதா வேட்டையன்.? 10 நாள் வசூல் விபரம்!!

புது டுவிஸ்ட் ஆக அடுத்த படம் குறித்து சிம்பு ட்வீட் செய்துள்ளார். அதில், தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா ஆகியவை இணைந்த படமாக ஜென் Z மோடில் இருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஜென் Z என்றால் 1995 முதல் 2010 வரை பிறந்தவர்களை தான் ஜென் Z என குறிப்பிடுவார்கள். அந்த மாதிரி படம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மற்றொரு ட்விட்டில், டேய் 2k கிட்ஸ்… 90ஸ் மூடுல நாளைக்கு ஷார்ப்பா 6.06க்கு வரேன் என பதிவிட்டுள்ளார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 126

    0

    0