நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

Author: Selvan
23 February 2025, 7:32 pm

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.காமெடி எமோஷனல்,காதல் என விறுவிறுப்பாக செல்லும் கதைக்களத்துடன் பக்கா கமர்சியல் படமாக இயக்குனர் எடுத்துள்ளார்.

இதையும் படியுங்க: கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி படக்குழு பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மேற்கொண்டது,அப்போது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை பார்த்து பலரும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர்.ஆனால் அது அனைத்திற்கும் தன்னுடைய படத்தின் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நிறைய பேர் சோசியல் மீடியாவில் என்னை திட்டினார்கள்,இவன பார்த்தாலே அடிக்கணும் போல தோணுது,ஓவர் தலைக்கனத்தில் ஆடிட்டு இருக்கான் என்று பல கருத்துக்களை தெரிவித்தார்கள்,அப்போது என்னுடைய படக்குழு எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார்கள்,அதிலும் குறிப்பாக நடிகர் சிம்பு என்ன பண்ணாததையா உன்ன பண்ண போறாங்க….பொறுமையா இரு நம்ம படம் பேசட்டும் என்று சிம்பு சொன்னார்,அது எனக்கு அந்த சமயத்தில் மிகவும் ஆறுதலாக இருந்தது.

இப்போது என் படம் ரிலீஸ் ஆன பிறகு அவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள் என்று அந்த பேட்டியில் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருப்பார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!