வயசான காலத்துல இதெல்லா தேவையா? பிரபல நடிகரை சகட்டு மேனிக்கு திட்டிய சில்க்!!

Author: Vignesh
16 March 2023, 5:02 pm

எம்ஜிஆர், சிவாஜிக்கு தமிழ் சினிமாவில் எப்பேற்பட்ட மதிப்பும் மரியாதையும் இருந்து வந்ததோ அதே அளவுக்கு வில்லன் நடிகரான நம்பியாருக்கும் அதே அளவு மரியாதையை தமிழ் சினிமா கொடுத்து வந்தது.

இதனிடையே, பிரபு நடித்த படத்தில் சில்க் ஒர் பாடல் ஆடுவது போன்ற காட்சி இருந்ததாம். அந்தப் பாடலில் கூடவே நம்பியாரும் ஒரு ஸ்டெப் ஆடுவது போல், படமாக்க செட்டிற்கு அனைவரும் வந்திருக்கின்றனர். அப்போது புலியூர் சரோஜாவிடம் நம்பியாரை பார்த்து அது யார் என்று சில்க் கேட்க, உடனே புலியூர் சரோஜா ‘அட மண்டு, அவர் தான் நம்பியார் என்றும், சீனியர் நடிகர், ஏன் உனக்கு தெரியாதா?’ எனக் கேட்டதற்கு, சில்க் தெரியாது என கூறி இருக்கிறார்.

silk smitha - updatenews360.jpg 2

இது மட்டுமில்லை, வயசான காலத்துல இதெல்லாம் அவருக்கு தேவையா ? என்றும், பேசாமல் வீட்ல கிடக்க வேண்டியது தானே? என்றும் கூறியுள்ளார் சில்க். இதைக் கேட்ட புலியூர் சரோஜா ஓடிப்போய் நம்பியாரிடம் ‘சாமி,அது ஒரு லூசு, அவ பேசுனத எதும் மனசுல வச்சுக்காதீங்க’ என்று நம்பியாரிடம் சொன்னாராம்.

Nambiar - Updatenews360

இதற்கு நம்பியார் ‘இருக்கட்டும்மா, நீ தான் சொல்றீல , பாத்துக்கிறேன்’ என்று மிகவும் சாதுவாக கூறி இருக்கிறார். மேலும் புலியூர் சரோஜா சில்கிடமும் ‘உன் வாய் சவடாலை எல்லாம் அவர்கிட்ட காட்டாதே, அவருடன் ஆடும் போது ஒழுங்கா ஆடு, எதாவது செஞ்சா நான் உனக்கு எதுமே எந்தப் படத்திற்குமே மாஸ்டராக வரமாட்டேன்’ என்று கண்டிப்புடன் கூறியதாக, இந்த சுவாரஸ்ய தகவலை புலியூர் சரோஜா ஒரு பேட்டியின் போது தெரிவித்தார்.

puliyur saroja - updatenews360
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!