உருவம் மட்டுமில்ல.. அதே ஊர், அதே மாதம்.. மார்க் ஆண்டனி சில்க் சொன்ன சர்ப்ரைஸ்..!
Author: Vignesh6 September 2023, 3:59 pm
பல ஃபிளாப் படங்களுக்கு பின் விஷால் நம்பி இருக்கும் படம் மார்க் ஆண்டனி. ‘மார்க் ஆண்டனி’ படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையில் செப்டம்பர் 15 இல் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. நான் வில்லன் எப்போதும் வில்லனாகவே இருப்பேன் என்ற விஷாலின் மாஸ் டயலாக்கிலும், பொம்பள சோக்கு கேக்குதா என எஸ் ஜே சூர்யா கூறி சுடும் டயலாக்கும்,சில்க் ஸ்மிதாவை அச்சு அசல் உரித்து வைத்த நடிகையின் லுக்கும் டிரைலரை சிறப்பாக கொண்டு சேர்த்துள்ளது.
மேலும் இது டைம் டிராவல் கதைபோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஆண்டனி படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக அமையும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
சில்க் ஸ்மிதா மறைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், இந்த படத்தில் எப்படி வந்தார் என்று நெட்டிசன் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. அதாவது மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் இன்ஸ்டாகிராம் மாடல் நடிகை விஷ்ணு பிரியா காந்தி என்று தெரியவந்துள்ளது. மேலும், அவரை நடிக்க வைத்து அதில் சில கிராபிக்ஸ் முக அமைப்பையும் மாற்றியுள்ளதாகவும் அதனால்தான் படத்தில் அச்சு அசல் சில்க் நடித்தது போல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது 90 ஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விஷ்ணு பிரியா காந்தி, தனக்கும் நடிகை சில்க் ஸ்மிதாவிற்கும் இருக்கும் ஒற்றுமைகளை குறித்து அவர் தெரிவித்துள்ளார். தன் சொந்த ஊர் திருப்பதி என்றும், சில்க் ஸ்மிதா 1996-இல் இறந்த நிலையில் தான் 1997-இல் பிறந்ததாக கூறி, சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் டிசம்பர் 3 என்றும், தன்னுடைய பிறந்தநாள் டிசம்பர் 13 என குறிப்பிட்டு, தன்னை சில்க் ஸ்மிதாவின் மறுபிறவி தான் என பலரும் கூறியதாகவும், மேலும் தனக்கு பல சமயங்களில் சில்க் ஸ்மிதா தனது கனவில் வந்துள்ளதாகவும் விஷ்ணு பிரியா தெரிவித்துள்ளார்.