பிரபல நடிகையின் கணவரை உருகி உருகி காதலித்த ‘சில்க் ஸ்மிதா’ : அட இவங்கதானா?

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2024, 2:41 pm

80களின் கனவுக்கன்னியான நடிகை சில்க் ஸ்மிதாவின் அறியாத பக்கங்கள் நிறைய உண்டு அதில் சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

பிரபல நடிகையாக கவர்ச்சிகன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. ரஜினி, கமலுக்கே இணையாக தனது படத்தை ஓட வைத்துவிடுவார்.

சிவாஜி, ரஜினி, கமல், என முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்த சில்க், எந்த படம் ரிலீசானாலும் இவருடைய ஒரு பாடல் ஆவது படத்தல் இடம்பெறும.

silk smitha secrets

அந்தளவுக்கு பிரபலமான சில்க் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒவ்வொரு வருடமும் சில்க் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளை ரசிகர்கள் மறந்ததே இல்லை.

தற்போது அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது சில்க் காதலித்த நபரை பற்றிய தகவல் தான் கசிந்துள்ளது.

பிரபல நடிகையான சுலோச்சனாவின் கணவரை தான் சில்க் காதலித்துள்ளார். போலீஸ் போலீஸ் என்ற படத்தில் சில்க் தான் மெயின் ரோல். மனோரமா, சுலோச்சனா என பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் மகனாக எம்எல்ஏ கோபி கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

silk smitha love story

அந்த படத்தில் நடித்த போதுதான் சுலோச்சனாவுடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

அதே போல எம்எஸ்வி கோபி கிருஷ்ணன் சில்க்கை வைத்து படம் தயாரித்துள்ளார். அப்போது படப்பிடிப்பின் போது சில்க், எம்எஸ்வி மகனுடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த சுலோச்சனாவை பார்த்து, நான் இவரைத்தான் முதலில் காதலித்தேன், அதற்குள் நீ முந்திக்கொண்டாய் எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது என கூறியுள்ளார்.

இதற்கு சுலோச்சனா, பரவால, நான் ஒதுங்கிக்கிறேன், நீ வேணா கட்டிக்கோ என கூற, அதெப்படி உங்க புருஷனை நான் கட்டிக்கிறது என கூறியுள்ளார். முன்னரே தெரிந்திருந்தால் திருமணத்தை தடுத்திருப்பேன் சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!