ஊட்டி குளிரில் சில்க் ஸ்மிதாவை… கமல் ஹாசனால் சினிமாவை விட்டே ஓட நினைத்த கொடுமை!

Author: Rajesh
12 January 2024, 2:00 pm

இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத படிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.

silk smitha - updatenews360 d

அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கிளாமரான காட்சிகளில் நடித்தார். திருமண வாழ்க்கையில் பெரும் துன்பவங்களை அனுபவித்த சில்க் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

பல்வேறு மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் படங்கள் நடித்துள்ளார். இவரது மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில் தற்போது சில்க் ஸ்மிதா கமல் ஹாசனுடன் நடித்த மூன்றாம் பிறை படத்தில் “பொன்மேனி உருகுதே” பாடலில் சேர்ந்து ஐட்டம் டான்ஸ் ஆடியிருப்பார். அந்த பாடலில் குட்டையான ஆடை அணிந்து நடுங்கும் குளிரில் நடனமாடியிருப்பார். அது சில்க் சுமிதாவுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்ததாம். அந்த நேரத்தில் சினிமாவை விட்டே ஓடிவிடலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்துவிட்டதாம்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…