பிரபல இயக்குநர் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் சில்க் ஸ்மிதா : உண்மையை உடைத்த பிரபலம்!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2023, 2:01 pm
சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. என்னதான் கவர்ச்சி நடிகை என்றாலும் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படி இல்லை. அவரின் நல்ல எண்ணங்கள், சமூக சேவை குறித்து பல பிரபலங்கள் ஓபனாக கூறியுள்ளனர்.
அவரின் காந்தக் கண்கள்தான் ரசிகர்களை கவ்வி இழுத்தது. 80 களில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்ட சில்க் ஸ்மிதா, சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் கங்கை அமரன் ஒரு பேட்டியில் சில்க் ஸ்மிதாவை பற்றி சில தகவலை கூறியுள்ளார். நானும், சில்க் ஸ்மிதாவும் நெருங்கிய நண்பர்கள். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் எனக்கு சில்க் போன் செய்து வீட்டிற்கு வரட்டுமா என்று கேட்டு வருவார்.
வீட்டிற்கு வந்து என் மனைவியோடு சமையல் செய்து, சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பார். அப்போது பிரேம்ஜி மிகவும் சின்ன பையன். என் மகனைப் பார்த்து இவனை நான் கல்யாணம் பண்ணிகிட்டுமா? என்று கேட்பார். நானும் ஓ…கே.. என்று தலையாட்டி சிரிப்பேன். என்னை எங்கு பார்த்தாலும், ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்வார். என்னை மச்சான் என்று தான் அழைப்பார்.
அந்த அளவுக்கு என்னுடம் அவர் நெருங்கி பழகினார். அவளை பார்க்கும்போது ஒரு கிராமத்திலிருந்து வந்தவள் போல் தெரியாது.
இன்று வரை அவளை போல் ஆடையிலும் சரி, முக அலங்காரத்திலும் சரி யாராலும் ரசித்து ரசித்து தன்னை மெருகேற்ற முடியாது. அந்த அளவுக்கு சில்க் தன்னை தானே மெதுவாக செதுக்கி செதுக்கி சினிமாவிற்காகவே படைக்கப்பட்டவள் போல் மாறினாள்.
சில்க் இறந்த போது, என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வார காலம் காய்ச்சலில் படுத்துவிட்டேன் என்றார்.