சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதில் கமிட் ஆனது இந்த பிரபலமா? நடிச்சிருந்தா நல்லாதானே இருந்திருக்கும்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 8:58 pm

நடிகர் சூர்யா தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களைக் கொடுத்து ஓடி கொண்டிருப்பவர். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் போன்ற படங்கள் வித்தியாசமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து தனது 42 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

அதை முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றிமாறனுடன் கைகோர்த்து வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இப்படி தொடர்ந்து டாப் இயக்குனர்களுடன் கைகோர்த்து நடிப்பதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இது போதாத குறைக்கு 2D என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இதனால் நாளா பக்கமும் சூர்யாவுக்கு காசு வந்து கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. சூர்யா நடிப்பில் என். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல்.

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்த ஜோதிகா, பூமிகா, வடிவேலு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. இந்த படத்தில் காதல்,காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் சூப்பராக இருந்ததால் இந்த படம் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்தது இப்பொழுதுமே பலருக்கும் ஃபேவரைட் திரைப்படமாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் சூர்யா கபதில் வேறு ஒரு நடிகரை தான் நடிக்க வைக்க இயக்குனர் திட்டம் போட்டாராம். முதலில் மாதவனை வைத்து தான் இயக்குனர் நினைத்தாராம்.

ஆனால் சில காரணங்களால் மாதவன் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக பிறகு சூர்யாவை அந்த படத்தில் கமீட் செய்து நடிக்க வைத்தாராம்..

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 616

    2

    0