மன்மதனே நீ காதலன் தான்…காதலின் கடவுளாய் STR…கட்டம் கட்டி களமிறங்கிய FIRST LOOK..!
Author: Selvan3 February 2025, 7:12 pm
மீண்டும் மன்மதனாக களமிறங்கும் STR
நடிகர் சிம்பு இன்று தன்னுடைய 42 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி,தற்போது வரை பல சாதனைகளை புரிந்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
அந்த வகையில் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய அடுத்தடுத்து படங்கள் குறித்த அப்டேட்களை வெளியிட்டு வந்தார்.தற்போது சிம்புவின் 51வது படம் குறித்து ஒரு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது,அந்த போஸ்டரில் சிம்புவின் புகைப்படத்தை போட்டு ‘THE GOD OF LOVE’ என்று போடப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்குகிறார்.
இதையும் படியுங்க: ஸ்லீவ்லெஸ்-க்கும் NO “சாய் பல்லவி தான் ரியல் ஹீரோயின்” –பிரபல இயக்குநர் வைரல் பேச்சு..!
மேலும் அந்த போஸ்டரில் “காதல் இருக்கும் பயத்தினால் கடவுள் பூமிக்கு வருவதில்லை,மீறி அவன் பூமி வந்தால்”…! கட்டம் கட்டி கலக்குவான்,என்று குறிப்பிட்டுள்ளது,இது ஒரு காதல் படமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது,இதனால் வின்டேஜ் சிம்புவை பார்க்கலாம்,இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…
— AGS Entertainment (@Ags_production) February 3, 2025
மீறி அவன் பூமி வந்தால்…?❤️🔥🔥#HBDSilambarasanTR
Kattam Katti Kalakrom 🔥#VintageSTRmood#STR51 #AGS27#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@SilambarasanTR_ @Dir_Ashwath@archanakalpathi… pic.twitter.com/aC0V10D2Qb
சிம்புவின் அடுத்தடுத்த அறிவிப்பால்,ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த வருடம் சிம்புவிற்கு தரமான கம் பேக் வருடமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.