ஹியூமன்ஸாடா நீங்க.. ஜனவரி 31 தான் நியூ இயர்.. ட்ரோலாகும் சிம்புவின் பேட்டிகள்..!(வீடியோ)

Author: Vignesh
1 January 2024, 4:02 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார்.

இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். பல காதல் கிசுகிசுகளில் தொடர்ந்து சிக்கி வரும் தமிழ் நடிகர் என்றால் சிம்புவை சொல்லலாம். படங்களை ஒரு இடைவேளைக்கு பிறகு திரும்பி அவர் தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்திற்காக தயாராகி வருகிறார். இப்போதும் சமூக வலைதளங்களில் எப்போது சிம்புவிற்கு கல்யாணம் என்ற பேச்சு அடிக்கடி எழுந்து வருகிறது. ஆனால் இதற்கு பதில் என்னவோ சிம்பு மற்றும் அவர் குடும்பத்தார் தான் கூற வேண்டும்.

இந்நிலையில், சிம்பு எப்போதும் சர்ச்சையான கருத்துக்களுக்கு பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. எதையாவது சர்ச்சையாக கருத்துகளை பேசி விட்டு சென்று விடுவார். அந்த வகையில், சில வருடங்களுக்கு முன்பு சிம்பு ஒரு பேட்டியில் டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு என்று சொல்வதற்கு பதிலாக ஜனவரி 31 என்று சொல்லிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அதை ஷேர் செய்து ஜனவரி 31 தான் எங்களுக்கு புத்தாண்டு என்று ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.

மேலும், தாய் குழந்தைக்கு வச்சிருக்க பாலை குடிக்கிறீங்களே, மாடு அதோட கன்னுக்குட்டிக்கு வச்சிருக்க பாலுய்யா அது, அதைப் போய் காஃபிடேவிலும், பாரிஸ்டாவிலும் குடிச்சிட்டு பேசுறீங்க, அப்படி குடிக்காத யாராவது இருந்தா அவன் வந்து கேள்வி கேளு என பேசிய வீடியோக்களை தற்போது வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…