அடிதூள்… மிரட்டல் லுக்கில் புதிய போஸ்டருடன் வெளியான ‘பத்து தல’ படத்தின் அப்டேட்..! குஷியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
31 December 2022, 2:00 pm

‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார். சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்தனர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

pathu thala -updatenews360

இந்தப்படத்திற்கு முன்பாகவே ‘பத்து தல’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழிலும் இயக்குனர் நரதனே இயக்கி வந்தார். தமிழ் ரீமேக் தாமதமானதால் கன்னடத்தில் யாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க கமிட் ஆனார் நரதன்.

pathu thala -updatenews360

இதனால் ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு,படத்தை இயக்க ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா கமிட் ஆனார். ‘பத்து தல’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

pathu thala -updatenews360

‘பத்து தல’ படத்தை டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் சிம்பு ‘பத்து தல’ படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வந்த போது, திடீரென தன்னுடைய தந்தை டி.ராஜேந்தருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது. இதனால் தன்னுடைய படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டு, அமெரிக்கா பறந்த சிம்பு தந்தையின் உடல்நலம் தேறிய பின்னர், மீண்டும் சென்னைக்கு வந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கினார்.

pathu thala -updatenews360

அதன்படி மார்ச் 30ஆம் தேதி, சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த ட்ரைலர், டீசர், ஆடியோ லான்ச் குறித்த தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 643

    1

    0