திருமணம் பண்ணா எப்படி இருக்கணும்; சிம்பு கொடுத்த அட்வைஸ்; ஏற்றுக் கொண்ட மணமக்கள்,..

Author: Sudha
15 July 2024, 10:21 am

சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வாயிலாக கோலிவுட் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குனராக அறிமுகமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இப்போது ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு.


மெட்ரோ திரைப்படத்தில் நடித்த ஹீரோ சிரிஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வரவேற்பு விழாவிற்கு சென்ற சிம்பு மணமக்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு அப்பா தன் மகளை பார்த்துக் கொள்வது போல ஒரு ஆண் தன் மனைவியை பார்த்துக்கொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறார். அது போலவே ஒரு தந்தையை மகள் கவனித்துக் கொள்வது போல கணவனை ஒரு பெண் கவனித்துக் கொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 123

    0

    0