பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போகும் சிம்பு..?

Author: Rajesh
29 January 2022, 12:56 pm

சிம்புவின் திரைவாழ்க்கையில் ‘மாநாடு’ திரைப்படம் முக்கியமான படமாக அமைந்தது. மேலும் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்பு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கௌதம்மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், சிம்புவின் பிறந்த நாளன்று வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து செம மாஸாக பாடல் ஒன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிம்பு நடித்துவரும் ‘பத்து தல’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்றும் அதுவும் சிம்புவின் கெட்டப் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்புவின் பிறந்த நாளுக்கு டபுள் டிரீட் இருப்பதாக தகவல் கசிந்து வருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?
  • Close menu