பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் சிம்பு..நடிப்பை ஓரம் தள்ளி விட்டு என்ன செய்கிறார் தெரியுமா…!
Author: Selvan6 December 2024, 10:05 pm
2021-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாநாடு படம், சிம்புவின் திரைப்பயணத்தில் புதிய பாதையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்,அதன் பின்பு வந்த வெந்து தணிந்தது காடு, பத்து தலை போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், சிம்பு சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார்.
தற்போது சிம்பு தக்லைப் படத்தில் கமல் கூட நடித்து வருகிறார்.அவருடைய STR 48 படம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த படத்தின் தயாரிப்பு செலவு அதிகமாக இருப்பதால்,தற்போது தான் அதற்கான தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்.
இதையும் படியுங்க: என் பாட்டை பாட எனக்கே உரிமையில்லையா…விரக்தியில் தேவா..!
இதற்கிடையில் சிம்பு, கிடைக்கிற வாய்ப்புகளை மிஸ் செய்யாமல் பயன்படுத்தி வருகிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் படத்திற்காக அவர் பாடலொன்றை பாட இருக்கிறார். இந்த படத்தின் பீர் பாடல் ரசிகர்களிடம் வெற்றி பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சிம்பு பாடலால் படத்தின் ஹைபை மேலும் உயர்த்த முடியும் என்று இயக்குனர் நினைத்துள்ளார். இதனை ஏற்று, சிம்பு தனது குரலால் டீசல் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்க இருக்கிறார்.
நீண்ட நாள் கழித்து சிம்புவின் குரலில் பாடல் வருவதால் ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்,அதே வேளையில் STR 48 உடன் மீண்டும் COME BACK கொடுப்பார் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.