யாரையும் நம்பி பயனில்லை; களத்தில் இறங்கிய வாரிசு நடிகர்; சும்மா அதிருதில்ல…

Author: Sudha
21 July 2024, 4:11 pm

மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்துத் தல திரைப்படங்களில் நடித்தார் சிம்பு. தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்து பல மாதங்கள் கடந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் விலகியது.

இதனால் இந்த படத்தை சிம்புவே புதிதாக ஆத்மேன் சிலம்பரசன் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தயாரிப்புக்கான பட்ஜெட் 200 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சிம்புவின் சில படங்களை சிம்பு சினி ஆர்ட்ஸ் என்னும் டி. ராஜேந்தரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.இனி யாரையும் நம்பி பயனில்லை நாமே களத்தில் இறங்குவோம் என சிம்பு தயாரிப்பு வேலையில் இறங்கி விட்டதாக திரை உலகம் பேசிக் கொள்கிறது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!