தேடிவந்த வாய்ப்பை தவறவிட்ட தனுஷ்.. ஸ்கோர் செய்து புலம்ப வைத்த சிம்பு..!

Author: Vignesh
20 February 2024, 10:21 am

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை. படத்தின் மூலமாக ஹீரோவாக அதிகமான சிம்பு தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்திருந்தார். குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் லிஸ்டில் இவர் பெயரும் இணைந்து விட்டது. சிம்பு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களிலும் தனது வெற்றியை நிலைநாட்டிய ஒருவர் என்று சொல்லலாம்.

actor-simbu 1

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார். இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.

dhanush simbu - updatenews360

இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தனது திரை வாழ்கையில் நடித்த சிறந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில், சிம்பு திரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். மாபெரும் வெற்றி அடைந்த படத்தில் முதல் ஹீரோவாக நடிக்க வந்தது சிம்பு கிடையாதாம். கௌதம் மேனனின், முதல் சாய்ஸ் தனுஷாக இருந்ததாம். படத்தில் வரும் கதாநாயகன் பார்க்க பக்கத்து வீட்டு பையன் போல் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷை தான் இயக்குனர் கௌதம் மேனன் முதலில் கமெண்ட் செய்த நிலையில், தனுஷும் கதை கேட்டு ஓகே செய்துவிட்டாராம்.

dhanush simbu - updatenews360

பின்னர், சில சூழ்நிலையின் காரணமாக இப்படத்தில் தனுஷால் நடிக்க முடியாமல் போய்விட்ட நிலையில், சிம்புவை கமிட் செய்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து, என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் தனுஷ ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 359

    0

    0