தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு சிம்பு தான் காரணமாம்?.. கடந்த காலத்தை கிளறுவது அசிங்கம்..!
Author: Vignesh25 April 2024, 11:11 am
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிலம்பரசன் என்கின்ற எஸ் டி ஆர் இவர். தமிழ் சினிமாவில் சிம்பு என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை மெருகேற்றி நிரூபித்தவர் சிம்பு. சமீபத்தில், வெளியான இவரது பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிம்பு பற்றிய புதிய செய்தி ஒன்று காட்டுத் தீயாக வெளியாகி வருகிறது. அதில், சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் காதலித்து வந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.
இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இதனால் காதல் தோல்வியிலிருந்து சிம்பு தன் காதலி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை வெறுப்பு ஏற்றுவதற்காக ஒரு சில செயல்களில் ஈடுபட்டாராம். அது தற்போது செய்தியாக வெளியாகி வைரலாக வருகிறது.
மேலும் படிக்க: அரைகுறை ஆடையில் இயக்குனருடன் படு நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் Video..!
சிம்புவை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு வயது மூத்தவர் என்பதை அனைவரும் அறிவோம். அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்ற காரணத்தினால் தன்னை விட வயது மூத்த ஹீரோயின்களுடன் சிம்பு திரைப்படங்களில் நடித்தும் அவர்களை கலாய்த்தும், வந்தது தற்போது செய்தியாக வெளியாகி இருக்கிறது. அவர்கள் எந்த ஹீரோயின்கள் என்னென்ன படங்களில் சிம்பு நடித்திருக்கிறார்கள் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
2004 ஆம் ஆண்டு ஹரிஷ் ஜெயராஜ் இசையில், ஹரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோவில். இந்த திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருப்பவர் சோனியா அகர்வால். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் அற்புதமாக இருக்கும். சோனியா அகர்வால் சிம்புவை விட ஒரு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்புவுக்கு பிடித்தமான ஹீரோயினான ஜோதிகா உடன் மன்மதன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். ஜோதிகா சிம்புவை விட நாலு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வயது வித்தியாசமே தெரியாத அளவிற்கு இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி இந்த இரண்டு படங்களில் அற்புதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கூலி படத்துக்காக கொட்டி கொடுத்த SUN Pictures.. நிரம்பி வழியும் ரஜினியின் கஜானா..!
வல்லவன் திரைப்படத்தில் சிம்புவின் பள்ளிப் பருவ காதலியாக நடித்திருப்பவர் ரீமாசென் மேலும், அந்த திரைப்படத்திலும் சிம்புவை விட ஒரு வயது மூத்தவராக நடித்திருப்பார். இந்த படத்தில் வில்லியான ரீமாசென் சிம்புவை கலாய்ப்பது போன்ற காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், கோலிவுட்டில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. சிலர் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் சிம்பு தான் என்று கருத்துக்களை பதிவிட்டும் வருகிறார்கள். இது குறித்து பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் ஐஸ்வர்யா அம்மாவாக மாறிவிட்டார். எல்லோருக்கும் கடந்த காலம் என்பது இருக்கும். அந்த கடந்த காலத்தை இப்போது கிளருவது அசிங்கம். ஐஸ்வர்யாவிற்கும் சிம்புவிற்கும் இடையேயான காதல் டீன் ஏஜில் இருந்தது. ஆனால், வயது முதிர்ச்சியடையும் சமயத்தில் அவர்களுக்கு எது சரி எது தவறு என்பதை அறிவார்கள். சிம்பு முன்பு போல் இப்போது இல்லை. இன்று இருக்கக்கூடிய அறிவும் பக்குவமும் அந்த சமயத்தில் அவருக்கு இல்லை. எனக்கு தெரிந்த சிம்வுக்கு பலி வாங்கும் எண்ணம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.