சினிமாத்துறையில், பரபரப்புக்கு என்றுமே பஞ்சம் இல்லாதவர் தான் நடிகர் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் சிறு வயதிலேயே கலக்கி இருப்பார்.

அவர் நடித்த மன்மதன், வல்லவன் போன்ற படங்கள், சினிமாத்துறையில் அவருக்கென்றே, ஒரு அங்கிகாரத்தைக் கொடுத்தது. பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும், படப்பிடிப்பிறகு தாமதமாக வருவது, இயக்குனர்களை மதிப்பதில்லை என, அவர் மீது பல குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. இதற்கிடையே பீப் பாடல் சர்ச்சை, தயாரிப்பளாருடன் பிரச்சனை என பல பிரச்சனைகளையும் சந்தித்து வந்தவர் தான் சிம்பு.

சினிமாவில், மட்டுமல்லாமல், காதல் வாழ்விலும் பல இன்னல்களையும், தோல்விகளையும் நடிகர் சிம்பு சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. வல்லவன் படத்தில் நயன்தாராவின் உதட்டைக் கடித்தபடி வெளியான போஸ்டர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பின. இவரும் காதலிப்பதாகவும் தகவல் வெளியாகின. பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக இருவரும் பிரிந்தனர் என கூறப்பட்டு, காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பின்னர், நடிகை ஹன்சிகாவுடன் மலர்ந்த காதல் வெறும் 6 மாதங்கள் மட்டுமே நீடித்தது. காரணம் எதுவும் கூறாமலே இருவரும் காதலை ரத்து செய்து கொண்டனர். இவ்வாறு தொடர் காதல் தோல்விகளின் காரணமாக மனம் நொந்த சிம்பு, கோவில் வழிபாடு, சினிமாத்துறையில் கவனம் செலுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது.
இதனிடையே ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வாலை காதலிப்பதாகவும், இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இந்த ஜோடி தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், இருவரும் இணைந்து விரைவில் திருமண தேதியை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இரு தரப்பிலும் உறுதி செய்யப்படாத நிலையில், பிப்ரவரி -3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.