சிம்புவுக்கு சீக்கிரமே கால்கட்டு?.. சைலண்டாக காய் நகர்த்திய வாரிசு நடிகை..!
Author: Vignesh29 January 2024, 9:30 am
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார்.

இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். பல காதல் கிசுகிசுகளில் தொடர்ந்து சிக்கி வரும் தமிழ் நடிகர் என்றால் சிம்புவை சொல்லலாம். படங்களை ஒரு இடைவேளைக்கு பிறகு திரும்பி அவர் தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்திற்காக தயாராகி வருகிறார்.

இந்நிலையில், டி ராஜேந்திரனின் இரண்டாம் மகன் குறளரசன் நபீலா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. ஏற்கனவே, தங்கைக்கு குழந்தை பிறந்து மாமா அந்தஸ்தை பெற்ற சிம்பு தற்போது, பெரியப்பா அந்தஸ்தையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நயன்தாராவுக்கு திருமணம் என்று அடிக்கடி வதந்தி பரவியதோ அதேபோன்றுதான் தற்போது சிம்புவுக்கும் நடக்கிறது. அதனால் சிம்புவுக்கு நயன்தாரா ராசி என்கிறார்கள் சமூகவாசிகள் ஆனால் நயன்தாரா ஒரு வழியாக திருமணம் செய்து செட்டிலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சிம்பு இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது நடிகர் சிம்பு பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாரை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரீல் ஜோடியாக திரையில் இருந்து வந்த சிம்பு வரலட்சுமி இருவரும் நிஜ வாழ்க்கையில், ரியல் ஜோடியாக போகிறார்கள். இதனை பார்த்து, ரசிகர்கள் ஒரு வழியா முரட்டு சிங்கிளுக்கு சிம்பு முடிவு கட்ட போகிறார் என குஷியில் இருந்து வருகிறார்கள்.