பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!

Author: Selvan
24 November 2024, 2:00 pm

சிம்பு பட நடிகை கர்ப்பம்

முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’-ன் மூலம் பிரபலமானவர் சனா கான்.இவர் மீண்டும் தாயாக போகிற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தமிழில் ஈ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். இவர் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜானு கதாபாத்திரத்தில் நடித்தார்.

Sana Khan second pregnancy


நடிகை சனா 2021 நவம்பர் 21 அன்று, சூரத்தில் முஃப்தி அனஸ் சையத்தை திருமணம் செய்தார்.அதன்பின்பு அவர்களுக்கு 2023 ஜூலை 5 அன்று, முதல் குழந்தை பிறந்தது . இப்போது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கர்ப்பமாக இருப்பதை அவர் தெரிவித்திருக்கிறார் .

தற்போது நடிகை சனா கான் மற்றும் அவரது கணவர் அனஸ் சையத் மீண்டும் பெற்றோர் ஆவதற்கான செய்தியை ஒரு அனிமேஷன் வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர் .

Sana Khan and Anass Saiyad baby news

அந்த வீடியோவில், “அல்லாஹ்வின் ஆசீர்வாதத்துடன், மூன்று பேர் கொண்ட எங்கள் குடும்பம் தற்போது நான்காக மாறப்போகிறது . அல்லாஹ்வுக்கு நன்றி. ஒரு சிறிய விருந்தினர் வர இருக்கிறார்.சையத் தாரிக் ஜமீல் அண்ணண் ஆவது உற்சாகமாக இருக்கிறது .”என்று குறிப்பிட்டுள்ளார்.

Sana Khan and Anass Saiyad baby news

இதனை தொடர்ந்து இவருக்கு பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 98

    0

    0