அடடே…சிம்புவுடன் இணையும் நயன்தாரா…ஆனால் அதுல ஒரு ட்விஸ்ட்..!
Author: Selvan12 February 2025, 5:58 pm
9 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் நயன்தாரா-சிம்பு
தமிழ் திரையுலகில் டாப் நடிகைளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா,இவர் தன்னுடைய நடிப்பு மூலம் அசுர வேகத்தில் முன்னேறினாலும்,தனிப்பட்ட வாழ்க்கையில் பல வித சவால்களை சந்தித்தார்.
இதையும் படியுங்க: இனி நம்ம ஆட்டத்த மட்டும் பாருங்க…ஜி வி பிரகாஷின் தெறிக்க விடும் சம்பவம் LOADING…!
ஆரம்ப காலத்தில் இவர் சிம்புவுடன் நெருங்கி பழகி,இருவரும் காதலித்து வந்த நிலையில்,விரைவில் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்த்த போது திடீரென பிரிந்தனர்,நீண்ட நாட்களுக்கு பிறகு ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒன்றாக நடித்தார்கள்,அதன் பிறகு எந்த ஒரு படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்ததில்லை,மேலும் இருவரும் ஒன்றாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் தற்போது இருவரும் ஒரே விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மேடை ஏற உள்ளனர்,அதாவது அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ட்ராகன் திரைப்படம் வருகின்ற பெப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது,இதனையொட்டி படக்குழு சென்னையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழாவில் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரையும் சிறப்பு விருந்தினர்களாக படக்குழு அழைத்துள்ளது.இதனால் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒரே விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.