ஸ்லிம் லுக்.. செம ஸ்டைலாக வேற லெவலில் STR.. சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்..!

Author: Vignesh
9 August 2023, 12:30 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனது தந்தை டி.ராஜேந்தர் நான்கு வயதில் “என் தங்கை கல்யாணி” படம் மூலம் சிம்புவை கைக்குழந்தையாக அறிமுகம் செய்துவைத்தார்.

simbu

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து சிறுவயதிலே சிம்பு புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பதினெட்டு வயதில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தம், குத்து, கோவில், மன்மதன், வல்லவன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

simbu nayan-updatenews360

இந்நிலையில் காதல் தோல்வி, பாட வாய்ப்பு இல்லாமல் இருந்த சிம்பு தற்போது கம்பேக் கொடுத்து தொடர் வெற்றிபடங்களை கொடுத்து வருகிறார். இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தற்போது நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

Simbu - updatenews360

சமீபத்தில் மலேசியாவில் நடந்த யுவனின் இசை நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்டார். சிம்புவின் புதிய லுக்கை கவனித்த ரசிகர்கள் பயங்கர ஆச்சரியத்தில் உள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தில், சுமார் 15 வருடத்திற்கு முன்பு இருந்த சிம்பு போன்று காணப்படுகின்றார். தாடி மற்றும் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலிஷ் ஆக இருக்கும் சிம்புவை கவனித்த ரசிகர்கள் ’எஸ்டிஆர் 48’ படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

Simbu - updatenews360
  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 440

    0

    0