ஏன் கல்யாணம் ஆகல?; ரகசியத்தை உடைத்த சிம்பு; ஆறுதலான ரசிகர்கள்

Author: Sudha
12 July 2024, 10:56 am

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் கால் பதித்தார் சிம்பு. இப்போது அவருக்கு 41 வயதாகிவிட்டது.அவர் தம்பி மற்றும் தங்கைக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது.

இப்படி இருக்கும்போது வீட்டிற்கு மூத்த பிள்ளையான சிம்புவுக்கு மட்டும் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பது அவர் பெற்றோருக்கும், ரசிகர்களுக்கும் கவலை அளித்துள்ளது.சிம்புவின் காதல் குறித்து நிறைய தகவல்கள் அவ்வப்போது பேசப்படும். இப்போது எந்த கிசு கிசு விலும் சிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.தற்போது ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் செலுத்தி வருகிறார்.

இதைக்குறித்து சிம்பு பேசியது இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த பொண்ணு தான் நமக்கு கரெக்டான பொண்ணு, நாம கல்யாணம் பண்ணப் போற பொண்ணு,நமக்கு ஏத்த பொண்ணு இதுதான் அப்படினு முடிவாகிடுச்சுன்னா அதுக்கு முன்னாடி ஆயிரத்து 500 பொண்ணு வந்தாலும் லவ் ஃபெயிலியர் தான்.

அந்த சரியான பொண்ணை நாம் சந்திக்கும் வரைக்கும், அதாவது சோல்மேட் வரும் வரைக்கும் கல்யாணம் நடக்காது என்றார்.இதை பார்த்த 90 s கிட்ஸ் பலரும் சிம்பு சொன்னா கரெக்டா தான் இருக்கும். நம்ம ஆள் வர்ற வரை வெயிட் பண்ணுவோம் என தமக்குள் பேசி வருகின்றனர்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!