பட வாய்ப்பை புறக்கணிக்கும் சிம்பு :அந்த இயக்குனருடன் NO… 2 வருடமாக தொடரும் மோதல்…!
Author: Selvan12 December 2024, 7:56 pm
கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணையும் புதிய படம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன், பல வெற்றிப்படங்களை தந்தவர் வேட்டையாடு விளையாடு,விண்ணைத்தாண்டி வருவாயா,காக்க காக்க,வாரணம் ஆயிரம்,வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இயக்குனராக மட்டுமின்றி, கடந்த சில வருடமாக நடிகராகவும் கௌதம் மேனன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவருகிறார்.லியோ,விடுதலை,கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் அவர் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
அவரின் அழுத்தமான மற்றும் தனித்துவமான நடிப்பு,அவருடைய குரல்வளம் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படியுங்க: 2024-ல் மிரட்டிய TOP 5 வில்லன்கள்…கோடிகளை அள்ளிய பிரபல நடிகர்கள்..!
இப்போது கௌதம் மேனன், தனக்கே உரிய கதையை எழுதி இயக்குவது என்ற பாரம்பரியத்தை மாற்றி, வெற்றிமாறன் எழுதிய கதையை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார். இது தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தாயாருக்கிறது முதலில், படத்தின் கதாநாயகனாக சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது.
ஆனால், கௌதம் மேனன் மற்றும் சிம்பு இடையே கடந்த 2 வருடமாக பேச்சுவார்த்தை இல்லையென்று கூறப்படுகிறது .அதுமட்டுமல்லாமல் சிம்பு ஏற்கனவே நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாலும், ஜெயம் ரவி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.