திடீரென சம்பளத்தை பாதியாக குறைத்த சிம்பு… மீண்டும் சறுக்கலா? ரசிகர்கள் கவலை!

Author: Shree
24 March 2023, 9:15 pm

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது.

இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நடிக்க ரூ.40 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இன்னும் படம் வெளியாகி வெற்றிபெறுவதை பொறுத்து மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இப்படியான நேரத்தில் நிச்சயம் சிம்பு பத்து தல படத்தின் வெற்றியை அடுத்து ரூ. 60லிருந்து ரூ.70 கோடி வரை சம்பளம் கேட்பார் என தயாரிப்பளார்கள் கிட்ட நெருங்கமுடியாமல் நடுங்கி வந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் சிம்பு திடீரென தனது அடுத்த படமான 48 வது படத்திற்கு ரூ. 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ஒரு வேலை சிம்புவின் பத்து தல படம் எதிர்பார்த்தபடி இல்லையா? தோல்வியை சந்திக்கும் என்ற அச்சத்தில் சம்பளத்தை குறைத்தாரா? என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள சிம்புவின் 48 படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 592

    0

    1