பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத சிம்பு… வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
3 April 2022, 7:25 pm

பிக் பாஸ் அல்டிமேட் நிகழச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறிய பிறகு தற்போது சிம்பு தான் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்த வாரம் இந்த ஷோ முடியவடைய உள்ள நிலையில் இந்த வாரம் சிம்பு ஷோவில் இருந்து ஒருவர் 25 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என கூறுகிறார். அது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த ப்ரோமோ வீடியோவில் சிம்பு தனது அப்பா மற்றும் அம்மா இருவரும் எப்படி வளர்த்தார்கள் என சொல்லி கண்கலங்கி பேசி இருக்கிறார்.

“எனக்கு கிடைத்த தாய் தகப்பன் போல அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா என தெரியவில்லை. இன்று நீங்கள் எல்லோரும் என்னை பார்த்து ரசிக்கிறீர்கள். என்னை இந்த அளவுக்கு அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்” என சிம்பு கண்ணீர் விட்டு இருக்கிறார்.

  • Kannada superstar Shivrajkumar cancer recovery நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!
  • Views: - 1537

    7

    1