சாணக்யா சாணக்யா… ஏதோ தந்திரம் செய்தாய்.. சிம்பு – த்ரிஷா கியூட்டான Unseen வீடியோ..!

Author: Vignesh
5 January 2024, 11:51 am

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார்.

இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். பல காதல் கிசுகிசுகளில் தொடர்ந்து சிக்கி வரும் தமிழ் நடிகர் என்றால் சிம்புவை சொல்லலாம். படங்களை ஒரு இடைவேளைக்கு பிறகு திரும்பி அவர் தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்திற்காக தயாராகி வருகிறார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் சூர்யா -ஜோதிகா, அஜித் -ஷாலினி, போலவே வெள்ளித்தறையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி என்றால், சிம்பு- திரிஷாவை சொல்லலாம். இவர்கள் இருவரும் 2003-ஆம் ஆண்டு அலை என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர், 2019-ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒன்றாக நடித்து கார்த்திக் ஜெசியாகவே வாழ்ந்தார்கள் என்று சொல்லும், அளவிற்கு படத்தின் கதை, பாடல்கள், வசனங்கள் எல்லாமே ஹிட் ஆனது.

Simbu - updatenews360

இவர்கள் படங்களை தாண்டி நிஜத்திலும், இணைய வேண்டும் என்று ரசிகர்களும் ஆசைப்பட்டார்கள். இந்நிலையில், சிம்பு- திரிஷா இருவரும் 2003 -ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சிக்காக சாணக்யா பாடலுக்கு நடனம் கற்றுக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?