சிங்கப்பூருக்கு படையெடுத்த “சிம்பு”…ரசிகைக்கு கொடுத்த பரிசு..வைரலாகும் வீடியோ..!

Author: Selvan
15 December 2024, 6:30 pm

யுவன்-சிம்பு கூட்டணி இசை கச்சேரி

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்டவர் நடிகர் சிம்பு. சிம்பு நடித்து வரும் புதிய படம் தக் லைஃப் இப்படத்தை பிரபல இயக்குநர் மணி ரத்னம் இயக்குகிறார்.

Simbu STR Singapore Concert

இதற்கிடையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இதையும் படியுங்க: கொல வெறியில் “அனுஷ்கா”…மிரட்டலாக வெளிவந்த காதி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ….!

இந்நிலையில் சிங்கப்பூரில் யுவன் சங்கர் ராஜா இசை கச்சேரியில், சிம்பு கலந்து கொண்டு பாட இருக்கிறார் என்ற தகவல் வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.இதற்காக முன்கூட்டியே சிம்பு சிங்கப்பூருக்கு சென்றார்.

நேற்று நடந்த இசை விழாவில் சிம்பு தனது மன்மதன் படத்தின் “மன்மதனே நீ கலைஞன் தான்” பாடலை பாடி கொண்டிருக்கும் போது,உச்சக்கட்டத்திற்கு சென்று தான் அணிந்திருந்த ஜாக்கெட்டினை கழட்டி ரசிகர்களை நோக்கி வீசினார்.

அந்த ஜாக்கெட்டை பிடித்த ரசிகை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!