அப்போ விஜய்யை டீலில் விட்டாச்சா? சிம்புவுடன் கூட்டணி வைத்த வெற்றிமாறன்!

Author: Rajesh
14 February 2024, 3:56 pm

விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனை படங்களும் சரித்திர வெற்றி படைத்தது என்றல் எது இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் தான். பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.

vetrimaran

தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்னர் இவர் இயக்கி வெளியான திரைப்படம் தான் விடுதலை. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இப்படத்தில் காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்தத்து.

அடுத்ததாக வெற்றிமாறன் விஜய்யின் சினிமா கெரியரில் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியது. இத்திரைப்படம் கோட்டா நீலிமா என்பர் எழுதிய நாவல் ஷூஸ் ஆஃப் தி டெட் கதையை கொண்டு எடுக்கப்படவுள்ளதாம்.

actor-simbu 1

இந்த கதையில் கோவிந்த் , கோபிநாத் இருவரும் சகோதரர்கள். இவர்களில் கோபிநாத் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இதனையடுத்து தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துகிறார் கோவிந்த். இந்த நாவல் விவசாயிகளின் துயரங்களையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் நிர்வாக தோல்விகளையும் தோலுரித்து காட்டியது.

இந்த கதையை தான் தளபதி 69 படத்திற்காக அரசியல் , ஊழல், லஞ்சம் என சீன் பை சீன் பக்கா பொலிட்டிகல் கதையாக தயார் செய்துள்ளாராம் வெற்றிமாறன்.விஜய் அரசியலுக்கு வரவுள்ள நிலையில் கடைசி படமாக இது வெளியானால் தரமான அரசியல் படமாகவும், மிகச்சிறந்த அரசியல் என்ட்ரியாகவும் அமையும் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷூஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையை வெற்றிமாறன் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டார் எனவே விஜய் கால்ஷீட் கொடுத்தால் உடனே வேலை ஆரம்பிப்பார் என்றெல்லம் செய்திகள் வெளியாகியது.

Vijay - Updatenews360

ஆனால், தற்போது வெற்றிமாறன் நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமீபத்திய செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆம், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ள இப்படத்தை வெற்றிமாறன் இயக்க சிம்பு ஹீரோவாக நடிக்கிறாராம். பக்கா மாஸ் கூட்டணி இணைந்திருப்பதால் இப்படம் வேற லெவலில் இருக்கும் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இதை கேட்ட நெட்டிசன்ஸ் அப்போ தளபதி 69 படத்தை இயக்கப்போறதா சொன்னதெல்லாம் உருட்டா? அரசியலில் இறங்குவதற்கு முன்பே விஜய்யை டீலில் விட்டுட்டாங்களேப்பா என கிண்டல் அடித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 295

    0

    0