படம் முடிஞ்சி வெளிய வந்ததும் டக்குனு அடுத்த ஷோக்கு டிக்கெட் எடுக்குறாங்க – “பத்து தல” ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்!
Author: Shree30 March 2023, 10:23 am
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பத்து தலை. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சிம்பு ஏஜிஆர் என்கிற டான் கேரக்டரில் நடித்துள்ளார்.
சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு ரசிகர்கள் இப்படத்தை மாபெரும் ஹிட் படமாக்கவேண்டும் என்பதற்காக காலையிலேயே தியேட்டர் முன் குவிந்து பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து , மேள தாளகளுடன் இப்படத்தின் ரிலீசை கொண்டாடினர். இப்படத்தை பார்த்த ஆடியன்ஸ் என்ன சொல்கிறார் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம் வாங்க.