பத்து தல படக்குழு திடீர் அறிவிப்பு… அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போகிறது? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட குழு!!

Author: Vignesh
2 November 2022, 1:00 pm

‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார். சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்தனர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

pathu thala -updatenews360

இந்தப்படத்திற்கு முன்பாகவே ‘பத்து தல’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழிலும் இயக்குனர் நரதனே இயக்கி வந்தார். தமிழ் ரீமேக் தாமதமானதால் கன்னடத்தில் யாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க கமிட் ஆனார் நரதன்.

pathu thala -updatenews360

இதனால் ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு,படத்தை இயக்க ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா கமிட் ஆனார். ‘பத்து தல’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

pathu thala -updatenews360

‘பத்து தல’ படத்தை டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் தற்போதைய சூழலில் இந்தப்படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pathu thala -updatenews360

‘பத்து தல’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மாநாடு, வெந்து தணிந்தது படங்களை தொடர்ந்து இந்தப்படத்தின் மூலம் சிம்பு ஹாட்ரிக் ஹிட்டடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முஃப்தி படத்தை போல் இல்லாமல் சிம்புவுக்கு ‘பத்து தல’ படத்தில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 727

    0

    0