உச்ச நடிகரிடம் அப்படி நடந்து கொண்ட சிம்ரன்.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த விஜய்யின் தந்தை..!
Author: Vignesh19 மே 2023, 12:30 மணி
ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.
1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.
பின்னர் தீபக் பக்கா எனபவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சிவாஜி முன்னணி நடிகராக 70, 80களில் கொடிக்கட்டி பறந்தார். ஒரு கட்டத்தில் குணச்சித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்த போது, எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் ஒன்ஸ் மோர்.
இந்த படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் பாலிவுட்டில் இருந்து தமிழில் நடிகை சிம்ரனை அறிமுகம் செய்து வைத்தார் எஸ் ஏ சந்திரசேகர். அப்போது சிவாஜி பற்றி ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த சிம்ரன் அவரை நேரில் பார்த்ததில்லையாம், ஒன்ஸ் மோர் படத்தின் ஒரு காட்சியை எடுக்க தயாராக இருந்ததபோது, 8 மணிக்கு ஷூட்டிங்கின் ஆரம்பிக்கவிருந்த நிலையில், சிவாஜி 7 மணிக்கே ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டதாகவும், சிம்ரன் மட்டும் வரவில்லையாம்.
இதனிடையே, பாலிவுட்டில் 10 மணிக்கு தான் ஷூட்டிங் நடத்துவார்கள் என்பதால் சிம்ரன் 10 மணிக்கு மேல் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். இதனால் கடும்கோபத்தில் இருந்த எஸ் ஏ சி, திட்ட ஆரம்பித்து படப்பிடிப்பே இன்று வேண்டாம் என்று அனுப்பி வைத்துவிட்டதாகவும், அதன்பின் அவ்வளவு நேரம் சிவாஜி காத்திருந்த விசயத்தை அறிந்த சிம்ரன், சிவாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பின்னர் தான் படப்பிடிப்பு நடந்துள்ளதாம்.
1
0