ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.
1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார். பின்னர் தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சிம்ரன் தீபக் பக்காவை திருமணம் செய்வதற்கு முன்னர் ஒரு சில நடிகர்களை காதலித்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆம், குறிப்பாக நடிகர் அப்பாஸ் -சிம்ரன் இருவரும் காதலித்து வந்தார்களாம். பூச்சூடவா படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட ஹெமிஸ்ட்ரி உண்மை காதலாக மாறிவிட்டதாம். அந்த சமயத்தில் இருவரது மார்க்கெட்டும் உச்சத்தில் இருந்ததால் அடுத்தடுத்த கொஞ்சம் படங்களில் நடித்துவிட்டு பின்னர் திருமணம் செய்துக்கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் , சிம்ரன் சினிமா நாளுக்கு நாள் கொடிகட்டி உச்சத்தில் பறந்தது. இதனால் அம்மணிக்கு மேன்மையான எண்ணங்கள் அதிகரிக்க கமல் போன்ற பெரிய நடிகர்கள் மீது க்ரஷ் வந்துவிட்டதாம். ஆனால் அப்பாஸ் , அப்படியே ரிவர்ஸில் முன்னணியில் இருந்து பின்னணிக்கு போனார். இதனால் சிம்ரன் அப்பாஸை கழட்டிவிட்டுவிட்டாராம். சிம்ரன் இல்லாமல் சினிமாவே இல்லை என்ற நிலை மாறியதால் சிம்ரனுக்கு அப்பாஸ் மீதிருந்த காதல் செல்லாக்காசு போல ஆகிவிட்டதாம்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.