எந்த ஊருமா நீ? சிவாஜியிடம் கடுமையாக சண்டை போட்ட சிம்ரன் – பயத்தில் நடுங்கிய விஜய் – காலில் விழுந்து மன்னிப்பு!
Author: Shree2 September 2023, 6:46 pm
சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது.
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.
இந்நிலையில் சிவாஜி குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் ஒன்ஸ்மோஸ்ர் படத்தின் ஷூட்டிங் காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவாஜி எப்போதும் படப்பிடிப்பு தளங்களுக்கு கிட்டத்தட்ட 1 மணி நேரம் முன்னதாகவே வந்திடுவாராம். அப்படித்தான் ஒன்ஸ்மோர் படத்தின் ஷூட்டிங்கிற்கு 6:15க்கே வந்து வெயிட் பண்ணிக்கொண்டிருந்தாராம். ஆனால், படத்தின் ஹீரோயின் சிம்ரன் 9:30 மணிக்கு தான் ஷூட்டிங் தளத்திற்கே வந்தாராம்.
இதனால் படக்குழு சிம்ரனை திட்டியதாம். இந்த நேரத்திற்கு ஷூட்டிங் வறீங்களே படம் எடுக்கணுமா? இல்ல பேக்கப் பண்ணனுமா? எப்போ மேக்கப் போட்டு ரெடி ஆகுறது? காலையில் எடுக்கவேண்டிய காட்சி இது என இப்போவே மணி 10 ஆகப்போகுது கேமரா ஆன் ஸ்டார் பண்றதுக்குள்ள 11 ஆகிடும் போல என திட்டினார்களாம். சிவாஜி ஐயா வேற காத்திட்டு இருக்காரு என வார்த்தைக்கு வார்த்தை சொல்ல சிம்ரன் கடுப்பாகி சிவாஜியை பார்த்தும் திட்டி வாக்குவாதம் செய்தாராம். இதையெல்லாம் பார்த்து விஜய் மிரண்டு போய்விட்டாராம்.
பின்னர் சிவாஜி சிம்ரனை பார்த்து… ஏம்மா இங்க வா? எந்த ஊர் நீ? என கேட்ட சரியாக பதில் சொல்லாமல் சீன் போட்டாராம். அதன் பின் சிவாஜி இயக்குனரை அழைத்து இனிமேல் தாமதமாக வரமாட்டாங்க அடுத்த வேலைய ஆரம்பியுங்கள் என கூறினாராம். அதன் பின்னர் அந்த ஷூட்டிங் முடிந்த பிறகு இவர் தான் சிவாஜி, நடிகர் திலகம், நடிப்பு ஜாம்பவான் அவரே இத்தனை மணி நேரம் காத்திட்டு இருக்காரு உங்களுக்கு என்ன? என கேட்க சிம்ரன் சிவாஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.