“20 வயசு குறைஞ்சு போச்சு.” சிம்ரன் வெளியிட்ட வீடியோ.. ரசிக்கும் ரசிகர்கள்.!
Author: Rajesh14 July 2022, 12:48 pm
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். அஜித் விஜய் சூர்யா கமல் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு வாய்ப்பு குறையவே குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார் சிம்ரன் தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கி நடிக்கத் தொடங்கிய நிலையில் பேட்டை படத்திலிருந்து படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே சிம்ரன் மிண்டும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அப்படி அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மகான். அப்படத்தில் சிம்ரன் விக்ரமுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது செம கியூட்டான வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “20 வயசு குறைஞ்சு போச்சு.” என கமெண்ட் செய்து வருகின்றனர்.