கணவருடன் நடிகை சிம்ரன் .. புகைப்படம் வெளியிட்டு சொன்ன விஷயம் என்ன தெரியுமா.?

Author: Rajesh
19 June 2022, 12:39 pm

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். அஜித் விஜய் சூர்யா கமல் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு வாய்ப்பு குறையவே குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார் சிம்ரன் தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கி நடிக்கத் தொடங்கிய நிலையில் பேட்டை படத்திலிருந்து படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே சிம்ரன் மிண்டும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அப்படி அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மகான். அப்படத்தில் சிம்ரன் விக்ரமுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செட்டிலாகியுள்ள சிம்ரன், தற்போது அவரின் கணவர் திபக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இன்று அப்பாக்கள் தினம் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ