90ஸ் கிட்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். இந்த 49 வயதிலும் அவர் இளமையாகவே இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் கூட ரம்மியமாக தோன்றி ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.
“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து சிம்ரன் “டூரிஸ்ட் பேமிலி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகை சிம்ரன் நேற்று தனது எக்ஸ் தளத்தில் மன வருத்தத்துடன் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.
சிம்ரனின் தங்கையான மோனல் 2000களில் மிக பிரபலமான நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்தார். “பார்வை ஒன்றே போதுமே”, “பத்ரி”, “சமுத்திரம்” போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த மோனல் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அக்காலகட்டத்தில் கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த வகையில் மோனல் இறந்து 23 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் சிம்ரன் தனது நினைவஞ்சலியை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்த எக்ஸ் தள பதிவில், “உன்னை நினைக்காமல் ஒரு நாளை கூட கடந்ததில்லை மோனல், இந்த 23 வருடத்தில். இன்னமும் சில அமைதியான தருணங்களில் உன்னுடைய நினைவின் துண்டுகளையே தேடிக்கொண்டிருக்கிறேன்” என தனது தங்கையின் நினைவுகளை பகிர்ந்துள்ளார். சிம்ரனின் இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.