அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா… மகனின் பிறந்தநாளில் சிம்ரன் செய்த செயல்!

Author: Shree
22 March 2023, 6:48 pm

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தீபக் பக்கா எனபவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது மகனின் பிறந்தநாளுக்கு காலையில் தினமும் கண்விழித்தால் பாடலுடன் வாழ்த்து கூறி அம்மா பாசத்தை வெளிப்படுத்தி அன்பை பொழிந்துள்ளார். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/p/CqA06O5IGc1/

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?