தென்னிந்திய சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை சிம்ரன் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து பட்டய கிளப்பி வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சிம்ரன் தன்னுடைய திரைத்துறை பயணம் குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.
அப்போது அவரிடம் கல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த நடிகை சிம்ரன் சில நேரங்களில் இதுபோன்ற செய்திகளை படிக்கும் போது அளவுக்கு மீறிய கோபம் தான் எனக்கு வரும் .
ஆனால் சட்டத்தை நான் கையில் எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கு தக்க தண்டனை சட்டம் தான் வாங்கி தர வேண்டும். ஒரு பெண் மீது பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது என்றால் உடனே அப்போதே ஏன் வெளியில் வந்து சொல்லவில்லை? என்ற ஒரு கேள்வி கேட்கிறார்கள்.
அது எப்படி சொல்ல முடியும்? நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே நேரம் எடுக்கும் அது மட்டுமில்லாமல் நாம் வெளியில் வந்து சொன்ன பிறகு அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும். அதனால் பின் விளைவுகள் எப்படி எல்லாம் ஏற்படும் என்பதை யோசித்தாலே நம்மை நடுங்கச் செய்துவிடும் .
அதனால் அது போன்ற விஷயங்களை வெளியில் சொல்லவே பல பேர் பயப்படுகிறோம். என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் போன்று தவறாக பேசினால் நான் 100% உடனடியாக அப்போதே எதிர்ப்பை தெரிவித்து விடுவேன். சின்ன வயசுல இருந்தே நான் இந்த மாதிரியான பிரச்சனைகளை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன்.
ஆனால், என்னால் அதை இப்போ சொல்ல முடியாது.வார்த்தைகள் மூலமாக உங்கள பலாத்காரம் செய்தாலோ அல்லது நடத்தை மூலமாக செய்தாலோ அது எப்படி இருந்தாலும் அது எதிர்த்து போராட வேண்டும் அமைதி காக்க கூடாது அது தவறு என நடிகை சிம்ரன் கூறியிருந்தார்.
0
0