“கையெடுத்து கும்பிட்ட சிம்ரன்”… வார்த்தைகளால் அரவணைத்த பிரசாந்த்!

Author:
10 August 2024, 3:59 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நட்சத்திர நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகர் பிரஷாந்த். பின்னர் திடீரென சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் அடையாளமே இல்லாமல் போய்விட்டார். பிரசாந்த் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கே இருக்கிறார்? என ரசிகர்களே கேட்கும் அளவிற்கு சினிமாவில் ஆளே இல்லாமல் போனார்.

பின்னர் பல வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார் நடிகர் பிரசாத். தற்போது விஜய்யுடன் “கோட்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர நடிகர் பிரசாந்த் அந்தகன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஆன ஆயிஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்த “அந்தாதூன்” படத்தின் தமிழ் ரீமேக் தான் “அந்தகன்” திரைப்படம். இந்த திரைப்படம் நேற்று ஆகஸ்ட் 9ம் ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் அந்தகன் படத்தின் பிரிமியர் ஷோ முடிந்ததும் பத்திரிகையாளரை சந்தித்து பேசிய நடிகர் சிம்ரன் கையெடுத்து கும்பிட்டு எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த தியாகராஜன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி என மிகவும் எமோஷனலாக பேசினார்.

இதை அடுத்து அருகில் இருந்த பிரசாந்த் அவருக்கு வார்த்தையால் ஆறுதல் கூறி அரவணைத்தார். இந்த திரைப்படம் பிரசாந்துக்கும் நடிகை சிம்ரனுக்குமே சிறப்பான இரண்டாவது இன்னிங்ஸ் ஆக இருக்கும் என ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…