ஐட்டம் சாங் ஆடின முதல் ஹீரோயின் இவங்க தான்… அந்த விஷயத்தை ஏத்துக்க முடியாமல் ஓடிட்டாங்க!

Author: Shree
15 June 2023, 3:35 pm

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

இந்நிலையில் ஆட்டம் பாட்டுக்கு கவர்ச்சி குத்தாட்டம் முதலில் போட்ட ஹீரோயின் சிம்ரன் தானாம். அதற்கு முன்பெல்லாம் ஐட்டம் பாடல் ஆடுவதற்கு என்றே தனி நடிகைகள் இருப்பார்களாம். ஆனால், சிம்ரன் தான் அதையெல்லாம் தகர்த்தெறிந்து நடனம் , நடிப்பு , கவர்ச்சி , உடல் அழகு என எல்லாவற்றிலும் ரசிகர்களை மயக்கினார்.

அந்த சமயத்தில் அவரின் மார்க்கெட் கிடுகிடுவென அதிகரித்தது. அப்போது தான் தங்கை மோனல் தற்கொலை செய்துகொண்டார். அதில் இருந்து சிம்ரனால் மீண்டு வரவே முடியவில்லையாம். பின்னர் சினிமாவே வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் பேட்ட படத்தில் நடிக்க வந்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!