சிம்புவை காதலித்து வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த நடிகை – வாழ்க்கையே நாசமாப்போன சோகம்!
Author: Shree15 April 2023, 3:31 pm
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனது தந்தை டி.ராஜேந்தர் நான்கு வயதில் “என் தங்கை கல்யாணி” படம் மூலம் சிம்புவை கைக்குழந்தையாக அறிமுகம் செய்துவைத்தார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பதினெட்டு வயதில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தம், குத்து, கோவில், மன்மதன், வல்லவன் உள்ளிட்ட பலவேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதில் மன்மதன் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் நடிகை சிந்து துலானி நடித்திருந்தார்கள்.
அப்படத்தில் சிந்து துலானி சிம்புவை காதலித்துக்கொண்டிருக்கும்போதே அவரை ஏமாற்றி வேறு ஒருவருடன் படுக்கையறை காட்சியில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதை பார்த்ததும் சிம்பு அவரை கொன்றுவிடுவார். இந்த காட்சி மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. ஆனால், அந்த ஒரே படத்தால் அவரது கெரியரே காலி ஆகிவிட்டது.
ஆம், அந்த படத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதனால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு கவனம் செலுத்தி வந்தார். அங்கும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காததால் வேற வழி இல்லை என திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். அவர் வாழ்க்கையில் மன்மதன் படத்தில் மட்டும் நடிக்கமால் இருந்திருந்தால் இந்நேரம் வேற லெவலில் இருந்திருப்பார்.