செத்ததுக்கு தண்ணியபோட்டு கொண்டாடுவார்.. வடிவேலுக்கு அடுத்த வருஷம் தான் – பிரபலம் ஆவேசம்..!

Author: Vignesh
18 January 2024, 1:14 pm

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில், மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

vadivelu

குறிப்பாக, போண்டாமணி, விஜயகாந்த் மறைவின்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத வடிவோலு கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல் ஆளாக வந்ததே பல விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், நடிகர் சிங்கமுத்து அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் நடிகர் வடிவேலுவை காட்டமாக விமர்சித்துள்ளார். அதில், வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் அவருக்கு கை கொடுத்தது. அவர் இவ்வளவு சொத்து சேர்த்ததற்கு காரணம் நான் தான் ஆனால், ஏழு கோடியை காணோம் என்று சொல்லிவிட்டார். எனக்கு எந்த கோடின்னு கூட தெரியாது. சொத்து வாங்க உதவி செய்வதில் விருந்து பாஸ்போர்ட் வரை நான் அவருக்கு எடுத்து கொடுத்திருக்கிறேன். இவ்வளவு சொத்து சேர்த்து நீ நிம்மதியாக இருந்திடுவியா எல்லாம் ஒரு லிமிட்ல இருக்கணும்… மக்களுக்கு அவன் அப்பாவி மாதிரி படத்தில் நடித்து தான் பிடித்து விட்டது. ஆனால் இப்போது அவரை உண்மை முகம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

vadivelu- updatenews360

மேலும், பேசுகையில் ஒரு மனிதன் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லது நல்ல நண்பர்களை வைத்திருக்க வேண்டும். அல்லது நல்ல நூல்களை படித்திருக்க வேண்டும். இது மூன்றுமே வடிவேலு கிட்ட கிடையாது. வளர்ப்பு சரியில்ல, விஜயகாந்த் இறப்பிற்கு வந்தியா? மனோபாலா இறப்பிற்கு வந்தியா? மயில்சாமி இறப்பிற்கு அவன் வரவே மாட்டான் என தெரியும்.

vadivelu

யாராவது இறந்துட்டா ஊர்ல இருக்க மாட்டாரு செத்ததுக்கு தண்ணிய போட்டுட்டு சந்தோஷம் படுவாரு…. இவருக்கு அடுத்த வருஷம் தெரியும் ஜாதகப்படி, வடிவேலு என் மேல வழக்கு போட்டாதால நான் சொல்றதை கூட பொய்னு கூட நினைக்கலாம். ஆனால், மற்றவர்கள் சொல்றாங்களே அப்போ, அது உண்மை தானே இந்த சமூகத்திற்கும் மக்களுக்கும் வில்லனே அவர்தான் என்று சிங்கமுத்து ஆதங்கத்துடன் பேசி உள்ளார்.

  • Adult Comedy Movie Perusu First Day Collection பெருசு படத்திற்கு இவ்வளவு மவுசா? முதல் நாளே பட்டையை கிளப்பிய வசூல்!