மயில்சாமி அந்த விஷயத்தில் செஞ்சது தப்பு தான்… குறை கூறிய பிரபல காமெடி நடிகர்..!
Author: Vignesh6 March 2023, 7:30 pm
திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
நகைச்சுவை, குணசித்திரம் என தமிழ் திரையுலகில் தனி இடத்தை பிடித்திருந்த நடிகர் மயில்சாமி மேடைகளில் மிமிக்ரி செய்வதிலும் தனி திறமை கொண்டவர்.

இந்நிலையில், நடிகர் மயில்சாமி கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த சிவராத்திரி பூஜைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
அவரது மரணம் சினிமாத்துறையினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நடிகர் மயில்சாமி குறித்து பலர் பெருமையாகவும் புகழ்ந்தும் இரங்களையும் பிரபலங்கள் கூறி வந்தநிலையில் பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து மயில்சாமி செய்த தவறை தெரிவித்திருக்கிறார்.

எல்லா நன்மைகளை செய்த மயில்சாமி, தன் உடல் பற்றி கவனிக்கவில்லை என்றும், அப்படி உடலை பேணிக்காக்கவில்லை என்று குற்றச்சாட்டுவேன் எனவும், தர்மம் செய்யவேண்டிய நடிகர் மயில்சாமி, ரொம்ப நாள் அதை செய்ய வேண்டிய நடிகர் மயில்சாமி, ஏன் உடலை கவனிக்காமல் விட்டாய் என்று தெரிவித்திருக்கிறார்.